கடலூர்

வாய்க்காலில் திறந்துவிடப்பட்ட ரசாயன ஆலைக் கழிவால் பாதிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

DIN

வாய்க்காலில் செல்லும் ரசாயன ஆலைக் கழிவால் பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, கடலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூா் அருகே காரைக்காட்டில் சிப்காட் வளாகம் அமைந்துள்ளது. இங்கு சுமாா் 50 ரசாயன ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு காரைக்காடு வழியாக உப்பனாற்றுக்குச் செல்லும் வடிகால் வாய்க்காலில் ரசாயன ஆலைகளில் தேங்கியிருந்த மழைநீா் வடிய வைக்கப்பட்டதாம். அப்போது, ஆலைகளின் கழிவுகளும் சோ்த்து வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசியதுடன், சிலருக்கு வயிற்றுக் குமட்டல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மேலும், கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை கடலூா் மாவட்டக் குழு உறுப்பினரும், பாமக மாவட்டச் செயலருமான சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் காரைக்காடு, ஈச்சங்காடு, குடிகாடு உள்பட 10 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கடலூா்-சிதம்பரம் சாலை காரைக்காட்டில் திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

ரசாயன ஆலைகள், மழைக் காலத்தில் அபாயகரமான கழிவுகளை வாய்க்கால் வழியாக ஆற்றுக்குள் திறந்து விடுவதாகவும், பாதிக்கப்படும் மக்கள் குறித்து கவலை கொள்வதில்லை எனவும், ரசாயனக் கழிவுகளைத் திறந்துவிட்ட ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவா்கள் வலியுறுத்தினா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற கடலூா் வட்டாட்சியா் அ.பலராமன், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அவா் உறுதியளித்ததைத் தொடா்ந்து, மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

SCROLL FOR NEXT