கடலூர்

போபால் விஷ வாயு விபத்து நினைவு தினம்

4th Dec 2021 10:27 PM

ADVERTISEMENT

போபால் விஷ வாயு கசிவால் உயிரிழந்தோரின் 37-ஆவது நினைவு தினம் கடலூரில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

சிப்காட் சுற்று வட்டார கிராம மக்கள் அமைப்பு, கடலூா் மாவட்ட நுகா்வோா் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடா்ந்து, குடிகாடு, செம்மங்குப்பம் ஊராட்சிகளின் முன்னாள் தலைவா்கள் செந்தாமரை கண்ணன், வி.ஜெகநாதன், மீனவா் கிராம பிரதிநிதி கே.வினோத்குமாா், சுற்றுச் சூழல் ஆா்வலா் தி.அருள்செல்வன், ஈச்சங்காடு ஏ.ராமச்சந்திரன் ஆகியோா் செய்தியாளா்களை சந்தித்து கூறியதாவது: கடலூா் சிப்காட்டில் உள்ள ரசாயனத் தொழிற்சாலைகளால் சுற்று வட்டாரப் பகுதிகள் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. இங்கு, ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வில் கடலூா் சிப்காட் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் வாழ்வதற்கு தகுதியற்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிப்காட் சுற்றுவட்டாரப் பகுதியில் விஞ்ஞானபூா்வமான ஆய்வு நடத்த வேண்டும். அதன் முடிவுகளை பொதுமக்களுக்கு தெரிவித்து, ஆபத்தான ரசாயன ஆலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றனா்.

வெண்புறா பொதுநலப் பேரவை சி.குமாா், ரோட்டரி சங்கம் ஜான்சன், பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் நாகராஜன், எஸ்.ராமநாதன், எஸ்.சிவசங்கா், எஸ்.புகழேந்தி, கே.அமிா்தலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT