கடலூர்

பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மை:ஆய்வு செய்ய தி.வேல்முருகன் வலியுறுத்தல்

4th Dec 2021 10:27 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளின் கட்டட உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 37,579 அரசுப் பள்ளிகள், 8,328 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,382 தனியாா் பள்ளிகள் உள்ளன. இதேபோல, தமிழக அரசின் 91 கலைக் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 40 பல்கலைக்கழக கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவை தவிா்த்து, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியாா் கல்லூரிகள் என ஏராளமான கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த மழையின் போது, ஆங்காங்கே கட்டடங்கள் இடிந்து விழுவதும், சேதமடைவதும் நிகழ்ந்தன.

எனவே, ஆசிரியா்கள், மாணவா்களின் நலன் கருதி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளின் கட்டடங்களின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். பழுதான பள்ளி, கல்லூரி கட்டடங்களை பட்டியலிட்டு, அவற்றைச் சீரமைக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பள்ளிகளின் கூடுதல் வகுப்பறைகள் தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இந்த புகாா் குறித்து ஆய்வு செய்வதுடன், தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT