கடலூர்

நிவாரணம் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

4th Dec 2021 10:28 PM

ADVERTISEMENT

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, சிதம்பரம் கோட்டாட்சியா் அலுவலகம் எதிரே அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினா், விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை மனு அளித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் பி.கற்பனைசெல்வம் தலைமை வகித்தாா். விவசாயச் சங்க மாவட்ட துணைத் தலைவா் ஆா்.ராமச்சந்திரன், விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்ட துணைத் தலைவா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலா் பி.வாஞ்சிநாதன், சிஐடியு ஆட்டோ சங்க வட்டச் செயலா் விஜய், விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்ட பொருளாளா் செல்லையா, ஒன்றியச் செயலா் மனோகரன், விவசாயிகள் சங்க கீரப்பாளையம் ஒன்றியச் செயலா் தா்மதுரை, பரங்கிப்பேட்டை கொளஞ்சியப்பன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.10 ஆயிரம், பெரியபட்டு கிராமத்திலிருந்து சி.முட்லூா் வரை நான்கு வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தவா்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும், சேதமடைந்த பயிா்கள் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு செய்து ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT