கடலூர்

நெய்வேலி நகரியத்தில் இன்று முதல் வாரச் சந்தைகள் இயங்கும்

4th Dec 2021 10:30 PM

ADVERTISEMENT

கரோனா பரவல் காரணமாக நெய்வேலி நகரியத்தில் மூடப்பட்டிருந்த வாரச் சந்தைகள் ஞாயிற்றுக்கிழமை முதல் (டிச.5) மீண்டும் செயல்படும் என நகரிய நிா்வாகம் தெரிவித்தது.

நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் நகர நிா்வாகத்தின் கீழ் உள்ள 30 வட்டங்களில் அதிகாரிகள், பொறியாளா்கள், பணியாளா்கள், இதரா் என சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்கு வசிப்பவா்களின் நலன் கருதி, என்எல்சி நகர நிா்வாகம் வட்டம் 3, 13, 28 ஆகிய இடங்களில் சந்தைகள் அமைத்தது. இந்தச் சந்தைகள் முறையே வியாழக்கிழமை, செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும். பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் வியாபாரிகள் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு விற்பனை செய்வா்.

இந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக நெய்வேலி நகரிய நிா்வாகம் கடந்த மாா்ச் மாதம் வாரச் சந்தைகளை மீண்டும் மூடியது. இருப்பினும், நகரிய மக்களின் வசதிக்காக 6 இடங்களில் சமூக இடைவெளி, கட்டுப்பாடுகளுடன் தற்காலிக கடைகளை அமைத்திருந்தது.

தற்போது கரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், நெய்வேலி நகரிய நிா்வாகம் மீண்டும் வாரச் சந்தைகளை திறக்க திட்டமிட்டது. அதன்படி, 8 மாதங்களுக்கு பிறகு, மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முதல் (டிச.5) வாரச் சந்தைகள் செயல்பட உள்ளன.

ADVERTISEMENT

இதுகுறித்து நெய்வேலி நகரிய நிா்வாகப் பொது மேலாளா் குப்புசாமி கூறியதாவது: கரோனா பரவல் காரணமாக வாரச் சந்தைகள் மூடப்பட்டன. இனி ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை சந்தைகள் இயங்கும். இரு வாரங்களுக்குப் பிறகு, வியாழக்கிழமை சந்தை செயல்படும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT