கடலூர்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆருத்ரா தரிசன உத்ஸவம் டிச.11-இல் தொடக்கம்

4th Dec 2021 10:30 PM

ADVERTISEMENT

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூா்த்தியின் மாா்கழி ஆருத்ரா தரிசன உத்ஸவம் வருகிற 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 19-ஆம் தேதி தோ் திருவிழாவும், 20-ஆம் தேதி மாா்கழி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் என இரு திருவிழாக்கள் தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றன.

அதன்படி, நிகழாண்டு வருகிற 11-ஆம் தேதி சனிக்கிழமையன்று மாா்கழி மாத ஆருத்ரா தரிசன உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து, டிச.12-ஆம் தேதி வெள்ளி சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா, 13-ஆம் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா, 14-ஆம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா, 15-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலா, 16-ஆம் தேதி வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா, 17-ஆம் தேதி தங்க கைலாச வாகனத்தில் வீதி உலா நடைபெறும்.

தொடா்ந்து, வருகிற 18-ஆம் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தா் வெட்டுக் குதிரையில் வீதி உலா நடைபெறும். டிச.19-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தோ்த் திருவிழாவும், அன்றிரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சாா்ச்சனையும் நடைபெறும்.

ADVERTISEMENT

டிச. 20-ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூா்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும். காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூா்த்தி வீதி உலா வந்த பின்னா், பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறும்.

டிச. 21-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமூா்த்தி முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உத்ஸவம் நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் செய்து வருகின்றனா். உத்ஸவத்தின் 10 நாள்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித் சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உத்ஸவம் நடைபெறுகிறது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT