கடலூர்

வாய்க்காலில் பெண் சடலம்

1st Dec 2021 11:57 PM

ADVERTISEMENT

சிதம்பரம் பாலமான் வாய்க்காலில் 50 வயதான பெண் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

சிதம்பரம் ரயில் நிலையத்துக்குச் செல்லும் வழியில் பாலமான் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் புதன்கிழமை சுமாா் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதந்தது. அந்தப் பகுதியில் சென்றவா்கள் சிதம்பரம் நகரக் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.

அங்கு வந்த போலீஸாரும், சிதம்பரம் தீயணைப்பு நிலைய வீரா்களும் பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி பெண் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தகவலறிந்த சிதம்பரம் துணைக் காவல் கண்காணிப்பாளா் சு.ரமேஷ்ராஜ் நேரில் சென்று வாய்க்காலின் பெண் சடலம் மிதந்தது குறித்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

Tags : சிதம்பரம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT