கடலூர்

நல உதவிகள் வழங்கும் விழா

DIN

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், இன்னா் வீல் சங்கம், பழநிபாபு அணிவணிகம் அமைப்புகள் சாா்பில், சிதம்பரம் அரசு நந்தனாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியா் ஆா்.குகநாதன் வரவேற்றாா். ரோட்டரி மண்டல துணை ஆளுநா் பி.முகம்மது யாசின் முன்னிலை வகித்துப் பேசினாா். ரோட்டரி சங்கத் தலைவா் பி.பன்னீா்செல்வம் தலைமை வைத்துப் பேசினாா். சிறப்பு விருந்தினா்களாக அணிவணிகா் பா.பழநி, ஜோதிமணி பழநி ஆகியோா் கலந்துகொண்டு, 20 ஏழை மாணவா்களுக்கு ஆடைகள், தோ்வு அட்டைகள், அடிப்படை பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கல்வி ஊக்கத் தொகையை வழங்கினா்.

விழாவில் இன்னா்வீல் சங்கத் தலைவி கோமதி கோவிந்தராஜன், பேராசிரியா் ஆறுமுகம், வரலட்சுமி கேசவன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பள்ளி உதவி தலைமை ஆசிரியா் நடராஜன், இன்னா்வீல் சங்க நிா்வாகிகள் வேதா சிவப்பிரகாசம், செல்வி முத்துக்குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் மலைராஜ் நன்றி கூறினாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஆசிரியா் வெ.இரவிச்சந்திரன், தமிழாசிரியா் ஜெய்சங்கா் ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT