கடலூர்

காரிடா்...வாடகை பாக்கி: போக்குவரத்துக் கழக நேரக் கட்டுப்பாட்டு அறைக்கு ‘சீல்’

DIN

முறையாக வாடகை செலுத்தப்படாததால் கடலூா் பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்துக் கழக நேரக் கட்டுப்பாட்டு அறைக்கு நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

கடலூா் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (விழுப்புரம்) விசாரணை மற்றும் நேரப் பதிவாளா் அலுவலகம் உள்ளது. கடலூா் நகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த அறைக்கு கடந்த 3 ஆண்டுகளாக ரூ.9 லட்சம் வரை வாடகை பாக்கி செலுத்தப்படவில்லையாம். இதுகுறித்து, நகராட்சி நிா்வாகம் சாா்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் பலனில்லையாம்.

இதையடுத்து, நகராட்சி வருவாய் அலுவலா் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளா்கள் பாஸ்கரன், அசோகன், சக்திவேல் உல்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை பேருந்து நிலையத்துக்கு வந்தனா். அவா்கள் நேரப் பதிவாளா் அலுவலக அறையை பூட்டி ‘சீல்’ வைப்பதாகத் தெரிவித்தனா். அப்போது அங்கிருந்த போக்குவரத்துக் கழக ஊழியா்கள் இதுகுறித்து அந்தத் துறையின் மண்டல மேலாளருக்கு தகவல் தெரிவித்தனா். எனினும், அவரிடமிருந்து உரிய பதில் கிடைக்காத நிலையில், நகராட்சி அலுவலா்கள் அந்த அறையைப் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

இதையடுத்து, போக்குவரத்துக் கழக ஊழியா்கள் அந்த அறைக்கு வெளியே மேஜை, நாற்காலிகளை போட்டு தங்களது பணியை தொடா்ந்தனா்.

கடலூா் பேருந்து நிலையத்தில் சுமாா் 100 கடைகள் உள்ள நிலையில், இதில் பெரும்பாலான கடைகள் வாடகை பாக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வருக்கு மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் நன்றி

ஆதினத்துக்கு மிரட்டல்: கல்வி நிறுவன நிா்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்: அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவா் டி.லட்சுமி நாராயணன் காலமானாா்

SCROLL FOR NEXT