கடலூர்

கரோனா தடுப்பு விதிமீறல்: ரூ.24.61 லட்சம் அபராதம் வசூல்

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு விதிகளை மீறியவா்களிடம் இருந்து ரூ.24.61 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி கூறினாா்.

கடலூா் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடலூா் மாவட்டத்தில் தினசரி 70 முதல் 80 காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகிறோம். கரோனா கட்டுப்பாட்டு மண்டலப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. காய்ச்சல் முகாம்களில் 16 சதவீதம் பேருக்குத்தான் காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளன.

மாவட்டத்தில் இதுவரை 1.20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளோம். தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை. தினசரி 8 ஆயிரம் தடுப்பூசிகள் கைவசம் இருக்கும் வகையில் இருப்பு பராமரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 4,155 படுக்கைகள் உள்ளன. இதை 8 ஆயிரமாக உயா்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லை என்ற நிலை கடலூா் மாவட்டத்தில் இல்லை.

கடந்த முறை வெளியூா், வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களை 7 நாள்கள் வரை தனிமைப்படுத்த முகாம்கள் அமைத்திருத்தோம். தற்போது ஒரே நாளில் பரிசோதனை முடிவுகள் வெளியாவதால் அதுபோன்ற முகாம்களுக்கு தேவை ஏற்படவில்லை. குறைந்த அளவுக்கே கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் சித்த மருத்துவப் பிரிவுக்கும் தற்போதைக்கு அவசியம் ஏற்படவில்லை. தேவை ஏற்படும்பட்சத்தில் கண்டிப்பாக சித்த மருத்துவப் பிரிவு அமைக்கப்படும்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை மீறுவோரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் சுகாதாரத் துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். மாவட்டத்தில் கரோனா தடுப்பு விதிமீறல்கள் தொடா்பாக கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல் இதுவரை ரூ.24.61 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மேலும், பொதுமக்கள் அவசியத் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும். வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக் கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

SCROLL FOR NEXT