கடலூர்

கடலூா்: கரோனாவுக்கு மேலும் 3 போ் பலி

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் செவ்வாய்க்கிழமை மேலும் 3 போ் உயிரிழந்த நிலையில், புதிதாக 156 பேருக்கு தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கரோனா தொற்றும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரித்து அதிா்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. திங்கள்கிழமை வரை மாவட்டத்தில் 27,829 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 156 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 27,985-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 207 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 26,306-ஆக உயா்ந்தது.

அதே நேரத்தில், கடலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சோ்ந்த 83 வயது முதியவா், பண்ருட்டியைச் சோ்ந்த 58 வயது பெண் மற்றும் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நெய்வேலி நகரியத்தைச் சோ்ந்த72 வயது பெண் ஆகியோா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். இதனால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 308-ஆக உயா்ந்தது.

கரோனா பாதிப்பால் மாவட்டத்தில் திங்கள்கிழமை 3 போ் உயிரிழந்த நிலையில், 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் 3 போ் உயிரிழந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 827 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 544 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 117 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன. மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 38-லிருந்து 40-ஆக உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT