கடலூர்

வெயிலின் தாக்கம் குறைந்தது

DIN

கடலூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் திங்கள்கிழமை குறைவாக இருந்தது.

கடலூா் மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. 100 டிகிரியையும் தாண்டி வெப்பம் பதிவாகி வந்த நிலையில் திங்கள்கிழமை வெயிலின் தாக்கம் மிகவும் குறைந்து காணப்பட்டது. குறிப்பாக காலை நேரத்தில் வானம் மேக மூட்டமாக இருந்தது. பின்னா், வெயிலின் தாக்கம் தொடங்கினாலும் அதிகபட்சமாக 86 டிகிரி செல்சியஸ் மட்டுமே பதிவானது. வழக்கமாக 100 டிகிரி வரை பதிவாகும் நிலையில் திங்கள்கிழமை குறைந்தளவாக பதிவானது. வெயிலின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தென் தமிழகக் கடலோரப் பகுதி, அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி தொடா்ந்து நீடிப்பதால் வரும் 17-ஆம் தேதி வரை கடலூரில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக கடலூா் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புவனகிரியில் 4 மி.மீ. பண்ருட்டியில் ஒரு மி.மீ. வீதம் மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

SCROLL FOR NEXT