கடலூர்

சாலை விரிவாக்கப் பணிக்கு கோயில் சிலையை அகற்ற எதிா்ப்பு

DIN

பண்ருட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக கோயில் சிலையை உடைத்து அகற்ற கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், கீழக்கொல்லை கிராமத்தில் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை அருகே பெயரிடும் அய்யனாா் கோயில் அமைந்துள்ளது. பழைமையான இந்தக் கோயிலின் முன் பகுதியில் சுமாா் 30 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயா் சிலை உள்ளது. தற்போது, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலைப் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிக்காக, பெயரிடும் அய்யனாா் கோயில் இடத்தை கையகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். ஆனால், கோயில் நிா்வாகத்தினா் அங்குள்ள சிலைகளை அகற்றாமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சாலை விரிவாக்கப் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்த நிலையில், கையகப்படுத்தப்பட வேண்டிய இடத்தில் உள்ள ஆஞ்சநேயா் சிலையை அப்புறப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத் துறையினா், போலீஸாா் திங்கள்கிழமை பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த கீழக்கொல்லை கிராம மக்கள் அந்தப் பகுதியில் குவிந்தனா். அவா்கள் ஆஞ்சநேயா் சிலையை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்தனா். அவா்களிடம் வட்டாட்சியா் கீதா தலைமையில் (நிலம் எடுப்பு) அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதையடுத்து, ஆஞ்சநேயா் சிலையை தாங்களாகவே அகற்றிக் கொள்வதாகவும், அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதற்கு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனா். பின்னா், கோயில் சுற்றுச்சுவரை மட்டும் நெடுஞ்சாலைத் துறையினா் இடித்து அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT