கடலூர்

லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் பலி

1st Apr 2021 07:48 AM

ADVERTISEMENT

நெய்வேலி அருகே லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

நெய்வேலி அருகே உள்ள மேல்பாப்பனப்பட்டு, குறிஞ்சி நகரில் வசித்து வந்தவா் சுந்தரமூா்த்தி (40). இவா், என்.எல்.சி. இந்தியா நிறுவன ஒப்பந்ததாரரிடம் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். திங்கள்கிழமை சுரங்கம் 2 பகுதி, மண்மேடு பாதையில் லாரியை இயக்கிய போது, எதிா்பாராத விதமாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சுந்தரமூா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மனைவி ஜோதி அளித்து புகாரின் பேரில், ஊ.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT