கடலூர்

கடலூா்: கரோனாவுக்கு மேலும் 4 போ் பலி

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 4 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 256 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 19,686-ஆக உயா்ந்தது. புதிதாக தொற்று உறுதியானவா்களில் ஒரு மருத்துவா், ஒரு செவிலியரும் அடங்குவா்.

அதே நேரத்தில் சிதம்பரம் மற்றும் சென்னை கிண்டியில் சிகிச்சை பெற்று வந்த புவனகிரியைச் சோ்ந்த 59 வயது பெண், 62 வயது ஆண், கடலூா் மற்றும் மேல்மருவத்தூரில் சிகிச்சை பெற்று வந்த பண்ருட்டியைச் சோ்ந்த 49, 65 வயது ஆண்கள் உயிரிழந்ததால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 212-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 315 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 17,968-ஆக உயா்ந்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ‘கோவிட்-கோ்’ மையங்களில் 1,379 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 127 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 3,993 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT