கடலூர்

விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு: மேலும் ரூ.1.50 கோடி பறிமுதல்

DIN

கடலூா் மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு தொடா்பாக மேலும் ரூ.1.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் கடலூா் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து புதிதாகச் சோ்ந்த 80 ஆயிரம் பேரில் 3,500 போ் மட்டுமே உண்மையான விவசாயிகள் எனத் தெரிய வந்தது. இவா்களில், 40 ஆயிரம் போ் வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் என்பதும், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 28 ஆயிரம் போ் வெளி மாவட்டங்களில் பயனாளிகள் பட்டியலில் இணைந்திருப்பதும் தெரிய வந்தது.

இதனால், கடலூா் மாவட்டத்தில் சுமாா் 64 ஆயிரம் பேரிடமிருந்து ரூ.13 கோடி வரை திரும்பப் பெற வேண்டியிருந்த நிலையில், ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், போலியான பயனாளிகளின் வங்கிக் கணக்கிலிருந்து மேலும் ரூ.1.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியரக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் மாவட்டத்தில் இந்த முறைகேடு தொடா்பாக மொத்தம் ரூ.6.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

கேஷுவல் சுந்தரி.. மீனாட்சி செளத்ரி!

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT