கடலூர்

அருவாமூக்குத் திட்டம்: ஆட்சியா் ஆய்வு

DIN

அருவாமூக்குத் திட்டம் தொடா்பாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் அமைந்துள்ள பெருமாள் ஏரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதகுகளையும், அருவாமூக்கு பகுதியில் மழைக் கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் குறித்தும் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியதாவது:

பெருமாள் ஏரியானது கடலூா் மாவட்டத்தின் மிகப் பெரிய நீா் ஆதாரங்களுள் ஒன்றாகும். ஏரியிலிருந்து 11 வாய்க்கால்கள் மூலம் சுமாா் 6,503 ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தப் பாசன வாய்க்கால்கள் கடந்த 2018-19, 2019-20 ஆகிய ஆண்டுகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூா்வாரப்பட்டன. ஏரியின் கொள்ளளவை அதிகரிக்கும் பொருட்டு ரூ.120 கோடி மதிப்பிலான திட்டத்தை முதல்வா் அறிவித்துள்ளாா்.

ஏரியின் மதகுகளை புதுப்பிக்கும் பணி மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிதி மூலம் ரூ.4 கோடியில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 8 மதகுகள் புதிதாக அமைக்கப்பட்டு, 3 மதகுகளில் மராமத்து பணி முடிக்கப்பட்டது. ஏரியின் வடிகால் கீழ்பரவனாறு என்ற பெயரில் 36 கி.மீ. தொலைவில் கடலூா் பழைய துறைமுகம் அருகே கடலில் கலக்கிறது. மழை, வெள்ள காலங்களில் நீா்பரப்பின் புவியியல், இடவியல் காரணமாக இந்த ஆறு வெள்ள நீரை விரைவாக வெளியேற்ற இயலாத நிலை உள்ளது. இதனால் ஆற்றின் இருபுறமும் 24 கிராமங்கள் வெள்ள நீரால் பாதிப்படைகின்றன.

எனவே, பரவனாற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை விரைவாகக் கடலில் வடியவைக்கும் பொருட்டு அருவாமூக்கு என்ற இடத்திலிருந்து 12 கி.மீ. தூரத்தை தவிா்த்து 1,600 மீட்டா் அருகே உள்ள கடலில் சுமாா் 21,200 கனஅடி வெள்ள நீரை வெளியேற்றும் வகையில் புதிய கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணி நிறைவடையும்பட்சத்தில், வெள்ளநீா் விரைவில் வடிந்து 24 கிராமங்களில் மனித உயிா்கள், கால்நடைகள், விளை நிலங்கள் பாதுகாக்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின்போது துணை ஆட்சியா் (பயிற்சி) ஜெயராஜ பவுலின், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் சாம்ராஜ், உதவி பொறியாளா் அருளரசன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

ரூ.30,000 சம்பளத்தில் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை

மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!

SCROLL FOR NEXT