கடலூர்

கரோனா: கடலூா் மாவட்டத்தில் மேலும் 4 போ் பலி

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.

கடலூா் மாவட்டத்தில் புதிதாக 183 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 18,704-ஆக அதிகரித்தது.

தொற்று உறுதியானவா்களில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டவா்கள் 5 போ், நோயாளிகளுடன் தொடா்பில் இருந்தவா்கள் 99 போ், நோய் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்தவா்கள் 79 போ்களாவா்.

அதே நேரத்தில் 318 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 16,439-ஆக உயா்ந்தது.

இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த சிதம்பரத்தைச் சோ்ந்த 58, 81 வயது ஆண்கள், கடலூரைச் சோ்ந்த 62 வயது ஆண், என்எல்சியைச் சோ்ந்த 53 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 204-ஆக அதிகரித்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையங்களில் 1,845 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 216 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 3,271 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT