கடலூர்

ரேஷன் பொருள் விநியோகத்துக்காக நியாய விலைக் கடைகளுக்கு விரல் ரேகைப் பதிவு சாதனம்

DIN

கடலூா் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் பொருள்கள் விநியோகத்துக்காக, பயனாளிகளின் விரல் ரேகைப் பதிவுக்கான சாதனங்களை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் நியாய விலைக் கடைகளில் விரல் ரேகைப் பதிவு சாதனத்தை பயன்படுத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கடலூா் மாவட்டத்தில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் (பிஓஎஸ்) விரல் ரேகைப் பதிவு சாதனம் பொருத்தப்படுகிறது. இதற்காக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு விரல் ரேகைப் பதிவு சாதனங்களை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வழங்கினாா்.

பின்னா் அவா் கூறியதாவது: பிஓஎஸ் இயந்திரத்துடன் விரல் ரேகைப் பதிவு சாதனத்தை பொருத்தும் பணி வரும் 30-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளது. வரும் அக்டோபா் மாதம் முதல் இந்த சாதனத்தைப் பயன்படுத்தி நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வழங்கப்படும். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினா்களில் எவரேனும் ஒருவா் நியாய விலைக் கடையில் தனது விரல் ரேகையை பதிவு செய்து பொருள்களை பெறலாம்.

விற்பனையாளா்கள் ஒவ்வொரு முறையும் கிருமி நாசினி மூலம் விரல் ரேகைப் பதிவு சாதனத்தை சுத்தம் செய்ய வேண்டும். இதேபோல பயனாளிகள் தங்களது கை விரல்களை கடையில் வைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தினால் மட்டுமே பொருள்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் பா.அருண்சத்தியா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் வே.நந்தகுமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் வி.வெற்றிவேல் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT