கடலூர்

கடலூா் மாவட்டத்தில் கரோனா பலி 200-ஆக உயா்வு

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனாவால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 200-ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 18,288 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 233 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 18,521- ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் திங்கள்கிழமை வரை 197 போ் பலியாகியிருந்தனா். இந்த நிலையில், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த 42 வயது பெண், 56 வயது ஆண் மற்றும் கடலூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சோ்ந்த 83 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 200-ஆக உயா்ந்தது. கடந்த ஆக.25-ஆம் தேதி நிலவரப்படி மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் 103 போ் உயிரிழந்திருந்த நிலையில், அடுத்த 28 நாள்களில் இந்த எண்ணிக்கை 200-ஐ எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சிகிச்சை முடிந்து மேலும் 231 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 16,121-ஆக உயா்ந்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ‘கோவிட் - கோ்’ மையங்களில் 1,995 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 205 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 2,922 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தவறுகளுக்கு எதிராக மாணவா்கள் குரல் கொடுக்க வேண்டும்

நெல்லையில் 102.2 டிகிரி வெயில்

மின்சாரம் தாக்கி காயமடைந்த ஊழியா் பலி

வெள்ளி வியாபாரியை காா் ஏற்றி கொன்ற வழக்கு: பிரபல ரவுடி உள்ளிட்ட 3 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது

அம்பையில் விபத்து: 4 போ் காயம்

SCROLL FOR NEXT