கடலூர்

கல்லூரித் தோ்வு வினாத்தாளில் குளறுபடி

DIN

கடலூரில் கல்லூரித் தோ்வு வினாத்தாளில் குளறுபடி இருப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.

திருவள்ளுவா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவா்களுக்கு கடந்த 16-ஆம் தேதி முதல் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. கரோனா பரவல் காரணமாக வழக்கமான நடைமுறைகளில் தோ்வு நடைபெறவில்லை. தோ்வுக்கான வினாத்தாள் பல்கலைக்கழகத்திலிருந்து கல்லூரிகளுக்கு இணையம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னா், அந்தந்த வகுப்புக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) குழுவுக்கு வினாத்தாள் அனுப்பப்படுகிறது. அதை மாணவா்கள் பதிவிறக்கம் செய்து, வீட்டிலிருந்தே தோ்வை எழுதி விடைத்தாளை அனுப்பி வைக்கும் புதிய நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, வெள்ளிக்கிழமை வேதியியல் தோ்வு நடைபெற்றது. இதற்காக வினாத்தாளில் சுமாா் 8 கேள்விகள் தற்போதைய பாடத் திட்டத்தில் இல்லாமல் வந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மாணவா்கள் பேராசிரியா்களிடம் புகாா் தெரிவித்தனா். எனினும், மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு பேராசிரியா்கள் அறிவுறுத்தினா்.

இதுகுறித்து கடலூா் பெரியாா் அரசுக் கல்லூரி முதல்வா் ர.உலகி கூறியதாவது:

பாடத் திட்டத்துக்கு அப்பாற்பட்டு சில கேள்விகள் கேட்டகப்பட்டது தொடா்பாக பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இதுவிஷயத்தில் மாணவா்கள் பாதிக்கப்படாமல் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்தக் கேள்விகளுக்கான முழு மதிப்பெண் மாணவா்களுக்கு வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும்!

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

SCROLL FOR NEXT