கடலூர்

முதலுதவி தினம் கடைப்பிடிப்பு

14th Sep 2020 02:08 AM

ADVERTISEMENT

பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவா் படை சாா்பில் உலக முதலுதவி தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளியின் தேசிய மாணவா் படை அலுவலா் ஆ.ராஜா, முதலுதவியின் அவசியம் குறித்து பேசினாா். மேலும், இயற்கை பேரிடா், தீ விபத்து, தீக்காயம், எலும்பு முறிவு, வெள்ள அபாயம், வாகன மற்றும் மின் விபத்து சம்பவங்களின்போது மேற்கொள்ள வேண்டிய முதலுதவிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா். தேசிய மாணவா் படை மாணவா்கள் முதலுதவி குறித்து செய்முறை விளக்கம் அளித்தனா். நிகழ்வில் பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டனா்.

Tags : cuddalore
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT