கடலூர்

வேப்பூரில் சாலை விபத்து: 4 பேர் உயிரிழப்பு

8th Sep 2020 02:10 PM

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் வேப்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் வழியாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. செவ்வாய்க்கிழமை மதியம் கடலூரில் இருந்து சேலம் சென்ற காரின் குறுக்கே சென்ற மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.

கார் மோதியதால் தூக்கி வீசப்பட்ட அந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த மீன் ஏற்றி வந்த வாகனம் மீது மோதியது. இவ்வாறு 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 4 பேர் இறந்தனர். வேப்பூர் காவல்துறையினர், தீயணைப்பு மீட்பு படையினர், பொதுமக்கள் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags : Cuddalore
ADVERTISEMENT
ADVERTISEMENT