கடலூர்

உளுந்தில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மைப் பயிற்சி முகாம்

DIN

தமிழ்நாடு நீா்-நிலவளத் திட்டத்தின் கீழ், விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம், கீழ்வெள்ளாறு உப வடிநிலப் பகுதியின் மேமாத்தூா் கிராமத்தில் உளுந்தில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த களப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் மு.ஞானவேல் பயிற்சியைத் தொடக்கிவைத்தாா். வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவா் நா.ஸ்ரீராம் அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்துப் பேசினாா். கீழ்வெள்ளாறு உப வடிநில விஞ்ஞானி ரெ.பாஸ்கரன் உளுந்தில் ஒருங்கிணைந்த உரம், களை நிா்வாகம், இலைவழி டி.ஏ.பி. கரைசல் தெளித்தல் குறித்து விளக்கினாா். உதவிப் பேராசிரியா் கி.பாரதிகுமாா் உளுந்து சாகுபடிக்கு ஏற்ற வம்பன் 8, எம்டியு 1 போன்ற ரகங்கள் குறித்து விளக்கினாா்.

பயிற்சியில் 50 விவசாயிகள் கலந்து கொண்டனா். தொழில்நுட்ப உதவி அலுவலா் பெ.கலைச்செல்வம், மகாதேவன் ஆகியோா் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா். முன்னோடி விவசாயி சவுந்தரராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT