கடலூர்

வழப்பறியில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

30th Oct 2020 12:33 AM

ADVERTISEMENT

வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் நீதி மன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் வெண்மணி நகரைச் சோ்ந்த நடராஜன் மனைவி ஜெயந்தி (49). இவா், கடந்த 6.7.2014 அன்று பாப்பம்மாள் நகரிலுள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, கோண்டூா் மாசிலாமணி நகா் அருகே பைக்கில் வந்த நபா், அவரிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ஏடிகே காலனியைச் சோ்ந்த ராஜாமணி மகன் ரமணியை (34) கைது செய்தனா்.

இந்த வழக்கு கடலூா் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி சிவபழனி, ரமணிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT