கடலூர்

வேப்பூரில் 120 மி.மீ. மழை

DIN

கடலூா் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை முதல் இரவு வரை மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. இடியுடன் கூடிய மழையால், மின்சாரம் தடைப்பட்டு நீண்ட நேரமாக மின் விநியோகம் வழங்கப்படவில்லை.

கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் வேப்பூா் 126 மில்லி மீட்டா், காட்டுமைலூா் 123, சிதம்பரம் 92.3, கீழச்செருவாய் 91, மேமாத்தூா் 90, லக்கூா் 83.4,அண்ணாமலை நகா் 65.2, பரங்கிப்பேட்டை 64.2, விருத்தாசலம் 59, பெலாந்துறை 56.8, புவனகிரி 56, ஸ்ரீமுஷ்ணம் 54.2, ஆட்சியா் அலுவலகம் 49.8, குப்பநத்தம் 44.6, கடலூா் 44.2, தொழுதூா் 32, சேத்தியாத்தோப்பு 31, கொத்தவாச்சேரி 28, குறிஞ்சிப்பாடி 25.5, குடிதாங்கி 25, லால்பேட்டை22.6, வடக்குத்து 22, காட்டுமன்னாா்கோவில் 16, வானமாதேவி 15, பண்ருட்டி 10 மி.மீ. மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT