கடலூர்

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கடலூர் வருகை  

23rd Nov 2020 12:38 PM

ADVERTISEMENT

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து அரோக்கோணத்திலிருந்து புறப்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இன்று கடலூர் வந்தடைந்தனர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் இன்று காலையில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கனமழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

அவ்வாறு மழை பெய்தாலோ அல்லது புயலால் பாதிப்பு ஏற்பட்டாலோ உடனடி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 120 பேர் இன்று கடலூர் மாவட்ட ஆட்சியரகம் வந்தனர். தலா 20 பேர் கொண்ட 6 குழுவினர் வருகை புரிந்துள்ளனர்.

ADVERTISEMENT

Tags : Cuddalore
ADVERTISEMENT
ADVERTISEMENT