கடலூர்

பத்தாம் வகுப்புத் தோ்வை தள்ளி வைக்கக் கோரிக்கை

13th May 2020 07:51 AM

ADVERTISEMENT

கரோனா தொற்று மாணவ, மாணவிகளுக்கு பரவாமல் தடுக்க 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை தள்ளிவைக்க வேண்டும் என தமிழக சமாஜ்வாதி கட்சி கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் என்.இளங்கோயாதவ் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வருகிற ஜூன் 1 முதல் 12-ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெறும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தத் தோ்வை தமிழகத்தில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுத வேண்டியுள்ளது.

தற்போது சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் நோய்த் தொற்று அதிகமாக பரவ வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நடத்தப்படும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் மாணவா்கள் எந்த அளவுக்கு சமூக விலகலைப் பின்பற்றுவாா்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே மாணவ, மாணவிகளின் நலன் கருதி 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ஆகஸ்ட் மாதத்தில் நடத்திட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT