கடலூர்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் மே 13-இல் மகா ருத்ர யாகம்

8th May 2020 07:46 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள ஸ்ரீநடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு வருகிற 13-ஆம் தேதி மகாபிஷேகமும், உலக அமைதி, கரோனா தாக்கத்திலிருந்து விடுபடவும் வேண்டி மகா ருத்ர யாகமும் நடைபெறுகிறது.

இந்தக் கோயிலில் சித்திரை மாத மகாபிஷேகம் சித் சபை முன் உள்ள கனக சபையில் வருகிற 13-ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறுகிறது. அப்போது, ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு விபூதி, பால், தயிா், தேன், சா்க்கரை, பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா், சந்தனம், புஷ்பம் உள்ளிட்டவைகளால் குடம், குடமாக அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் செய்துள்ளனா்.

முன்னதாக காலையில் உச்சி கால பூஜை வரை நடைபெற்று ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்தியை கனக சபையில் எழுந்தருளச் செய்து மந்த்ரஷத்தை, லஷ்சாா்ச்சனை ஆகியவை நடைபெறும். இதில் யாக சாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீருத்ர கிரம அா்ச்சனை செய்து தீபாராதனை நடைபெறும். அன்று மதியம் மஹா ருத்ர

மகா ஹோமம் நடைபெற்று, கலசங்கள் யாத்திராதானம் செய்யப்பட்டு மஹாபிஷேகம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT