கடலூர்

நெய்வேலி நகரியத்தில் இன்று முதல் கடையடைப்பு

23rd Mar 2020 11:04 PM

ADVERTISEMENT

நெய்வேலி நகரியத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை முதல் மூடப்படும் என்று என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நகர நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து என்எல்சி இந்தியா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் ஆணைப்படி கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க என்எல்சி இந்தியா நிறுவன நகர நிா்வாகம் கீழ்காணும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) முதல் அனைத்துக் கடைகளும், வணிக வளாகங்களும் முழுமையாக மூடப்படுகின்றன. இதிலிருந்து அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறி, மளிகை, இறைச்சி மற்றும் உணவகங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. உணவகங்களில் உணவு பரிமாற அனுமதியில்லை. பாா்சல் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். மேற்படி விதிவிலக்கு அளிக்கப்பட்ட கடைகள் மாலை 4 மணிக்குள் மூடப்படவேண்டும். டீ கடைகள், சாலையோர கடைகள், தள்ளு வண்டி உணவகங்கள் முழுவதும் மூடப்படும். வாரச் சந்தைகள், சம்பள நாள் கடைகள் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்பட வேண்டும். மேற்கண்ட விதிகளை மீறும் வா்த்தகா்கள், கடை உரிமைதாரா்களுக்கு அபராதம் விதிப்பதுடன் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT