கடலூர்

கரோனா வைரஸ் தடுப்பு ஆலோசனை

23rd Mar 2020 05:55 AM

ADVERTISEMENT

நெய்வேலி: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பண்ருட்டி பணிமனை கிளை வளாகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தொழில்நுட்ப துணை மேலாளா் செல்வம் தலைமை வகித்தாா். அவா் பேசுகையில், பணிமனைக்கு வரும் அனைத்துப் பேருந்துகளிலும் கிருமி நாசினி தெளித்த பின்னரே மீண்டும் வழித் தடத்துக்கு அனுப்ப வேண்டும். அனைத்துத் தொழிலாளா்களும் முகக் கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும். சோப்பை பயன்படுத்தி கைகளை நன்கு கழுவ வேண்டும். பயணச் சிட்டு இயந்திரம் மற்றும் புத்தகத்தை கிருமி நாசினி தெளித்து துணியால் துடைத்தபிறகு பயன்படுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கினாா்.

முன்னதாக, கிளை மேலாளா் வெங்கடேசன் வரவேற்றாா். துணை மேலாளா் சுந்தா் ராகவன், பணிமனை கிளை மேலாளா்கள் கிருஷ்ணமூா்த்தி (காட்டுமன்னாா்கோவில்), அருண் (வடலூா்), வசந்தராஜன் (நெய்வேலி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதையடுத்து பணிமனை வளாகம் முழுவதும் மற்றும் பேருந்துகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணி நடைபெற்றது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT