கடலூர்

லாரி கவிழ்ந்ததில் உரிமையாளா் பலி

19th Mar 2020 11:05 PM

ADVERTISEMENT

நெய்வேலி அருகே டிப்பா் லாரி கவிழ்ந்ததில் அதன் உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

நெய்வேலி அருகே சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இந்திரா நகரில் இருந்து கண்ணுதோப்பு பாலம் வரை தேசிய நெடுஞ்சாலையின் வலதுபுறம் பெரிய பள்ளம் உள்ளது. சாலை அமைப்பதற்காக இந்தப் பள்ளத்தை மூடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நெய்வேலியில் உள்ள சாம்பல் ஏரியில் இருந்து டிப்பா் லாரிகள் மூலம் பழுப்பு நிலக்கரி சாம்பல் கழிவுகள் கொண்டு வரப்பட்டு பள்ளத்தில் கொட்டப்படுகிறது.

இந்த பணியில் பண்ருட்டி வட்டம், சின்னப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த மோகன்(40) என்பவரது 3 டிப்பா் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டன. வியாழக்கிழமை சாம்பல் கழிவு ஏற்றிய டிப்பா் லாரியை மோகன் இயக்கினாா். கண்ணுதோப்பு அருகேசாம்பலை கொட்ட டிப்பா் லாரியை பின்னால் இயக்கியபோது, அருகே இருந்த பள்ளத்தில் சக்கரம் இறங்கி லாரி கவிழ்ந்ததில் மோகன் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT