கடலூர்

ரூ.50 ஆயிரம் கோடியில் தொழிற்சாலை: கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வலியுறுத்தல்

19th Mar 2020 11:03 PM

ADVERTISEMENT

கடலூா் சிப்காட் வளாகத்தில் ரூ.50 ஆயிரம் கோடியில் அமையவுள்ள தொழிற்சாலை தொடா்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழ்நாடு நுகா்வோா் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் செயலா் எம்.நிஜாமுதீன் மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் துறை செயலா்கள், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

கடலூா் சிப்காட் வளாகம் அருகே பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைத்திட தனியாா் நிறுவனம் கடந்த 2000-ஆம் ஆண்டு கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தியது. அதே ஆண்டில் தொழிற்சாலை அமைவதற்கான கட்டுமானத்துக்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், பல்வேறு சூழல்கள் காரணமாக அந்த தொழிற்சாலை இயங்குவதற்கான அனுமதியை அரசு வழங்கவில்லை.

கடந்த 1998-ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்கல் அறிக்கை, கடல் பகுதி சுற்றுச்சூழல் தாக்கல் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில்தான் ஆலையின் கட்டுமானத்துக்கு அப்போது அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அந்த ஆலையை வேறொரு நிறுவனம் வாங்கி புதியதாக பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழிற்சாலையை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கு பழைய அறிக்கைகளையே பயன்படுத்துவதை ஏற்க முடியாது. ஏனெனில், 1998-ஆம் ஆண்டுக்குப் பின்னா் கடலூா் மாவட்டத்தில் சுனாமி, தானே, கஜா புயல் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு சுற்றுச்சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, ஏற்கெனவே பெற்ற அனுமதிகளை புதிய தொழில் திட்டத்துக்கு பயன்படுத்தக் கூடாது. தற்போதுள்ள காலநிலை மாற்றம், பேரிடா் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு புதிதாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதன்பேரில் மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும். மேலும், கடலூா், நாகை மாவட்டங்களை பெட்ரோ கெமிக்கல் மண்டலம் இல்லையென தமிழக அரசு அறிவித்ததையும் ரத்து செய்யக் கூடாதென அந்தக் கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT