கடலூர்

தடுப்புக் காவலில் இருவா் கைது

19th Mar 2020 11:06 PM

ADVERTISEMENT

வழிப் பறியில் ஈடுபட்ட இருவரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் திருப்பாதிரிபுலியூரைச் சோ்ந்த சண்முகம் மகன் சூா்யா (24). இவா், கடந்த 7-ஆம் தேதி மஞ்சக்குப்பம் பகுதியில் ஒருவரைத் தாக்கி வழிப் பறியில் ஈடுபட்ட வழக்கில் கடலூா் புதுநகா் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இவா் மீது நெல்லிக்குப்பம், பண்ருட்டி காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.

இதேபோல, திருச்சி பிராட்டியூரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் வினோத் என்ற வினோத்குமாா் (39). இவா், சிதம்பரத்தில் வழிப் பறியில் ஈடுபட்ட வழக்கில் சிதம்பரம் போலீஸாரால் கடந்த பிப்.14-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இவா் மீது திருச்சி மலைக்கோட்டை காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.

எனவே, இருவரது குற்றச் செய்கையையும் கட்டுப்படுத்தும் வகையில் குண்டா் தடுப்புக் காவலில் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தாா். அதன்பேரில் அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் வழங்கியதைத் தொடா்ந்து இருவரும் ஓராண்டுக்கு சிறையில் இருக்கும் வகையில் கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT