கடலூர்

நகராட்சி, பேரூராட்சிகளில் 654 வாக்குச் சாவடிகள்

8th Mar 2020 01:24 AM

ADVERTISEMENT

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 654 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் 29 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. மீதமுள்ள மாவட்டங்களில் இந்தத் தோ்தலை நடத்தி முடிப்பதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதேபோல, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தோ்தல்களும் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், கடலூா் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் தோ்தலை நடத்துவதற்கு ஆயத்தமாகும் வகையில் வாக்குச் சாவடிகள் குறித்த விவரத்தை மாவட்ட தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 நகராட்சிகளில் 356 வாக்குச் சாவடிகள் அமைகின்றன. இதில், தலா 141 வாக்குச் சாவடிகள் இருபாலருக்கும் தனித் தனியாக அமைக்கப்படுகின்றன. 74 வாக்குச் சாவடிகள் பொதுவானவையாகும்.

ADVERTISEMENT

16 பேரூராட்சிகளில் மொத்தம் 298 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதில், தலா 37 ஆண், பெண்களுக்கான தனி வாக்குச் சாவடிகளாகவும், 224 பொது வாக்குச் சாவடிகளாகவும் அமைக்கப்படுகின்றன.

நிறைவு செய்யப்பட்ட இந்த வாக்குச் சாவடிகள் குறித்த விவரம் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த விவரங்களைப் பாா்வையிட்டு தங்களுக்கான வாக்குச் சாவடிகளை தெரிந்துகொள்ளலாம் என்று ஆட்சியா் அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT