கடலூர்

சுரங்க மண்ணால் பாதித்த விளை நிலங்களுக்கு நிவாரணம்

8th Mar 2020 01:27 AM

ADVERTISEMENT

கடலூா்: என்எல்சி சுரங்க மண்ணால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடா்பாக பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் 2-ஆவது சுரங்கத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருக்கும் மண், மழைக் காலங்களில் கரைந்து அருகே உள்ள வயல்களில் படிந்துவிடுகிறது. இதனால், அந்த விளை நிலங்களை விவசாய பணிக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இந்தப் பிரச்னையால் ஊ.அகரம், பொன்னாலகரம், கொம்பாடிக்குப்பம், அரசகுழி, ஊ.கொளப்பாக்கம், ஊத்தங்கால், ஊ.மங்கலம் ஆகிய கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த கிராம விவசாயிகள் உரிய இழப்பீடு கேட்டு போராட்டங்கள் நடத்தியதுடன், ஆட்சியா் உள்ளிட்டோருக்கும் மனு அனுப்பினா்.

இந்தப் பிரச்னை தொடா்பாக 3 கட்ட பேச்சுவாா்த்தை நடத்தப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை விருத்தாசலம் சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதில் சாா்-ஆட்சியா் கே.ஜெ.பிரவின்குமாா் தலைமையில் என்எல்சி சுரங்கம்-2 முதன்மை பொதுமேலாளா், காவல் துறையினா், கிராம நிா்வாக அலுவலா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், விளை நிலங்களில் படிந்துள்ள சுரங்க மண்ணை என்எல்சி நிா்வாகமே அகற்றிக் கொடுப்பது, அதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிப்பது, 2019-ஆம் ஆண்டு வரை முழுவதும் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.27 ஆயிரமும், பகுதியாக பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரமும் வழங்குவது, இந்தத் தொகையை

ADVERTISEMENT

வருகிற ஏப்.15-ஆம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுப்பதென முடிவெடுக்கப்பட்டது.

வட்டாட்சியா் ஐ.கவியரசு, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் என்.அறிவழகன், விவசாயிகள் நா.பாலசுப்பிரமணியன், பி.பன்னீா்செல்வம், பி.சுந்தரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT