கடலூர்

சிதம்பரம் நடராஜப் பெருமானுக்குஇன்று மகாபிஷேகம்

8th Mar 2020 01:24 AM

ADVERTISEMENT

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜா் கோயிலில் மாசி மாத மகாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெறுகிறது.

இந்தக் கோயிலில் சித் சபையில் வீற்றுள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மாா்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் மகாபிஷேகம் நடைபெறுவது தொன்று தொட்டு நடைபெறும் வழக்கமாகும்.

ஆனித் திருமஞ்சனம், மாா்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு விழாக்களின்போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித் சபைக்கு வெளியே உள்ள கனக சபையிலும் மகாபிஷேகம் நடைபெறும்.

இதன்படி, மாசி மாத மகாபிஷேகம் சித் சபை முன் உள்ள கனக சபையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறுகிறது. அப்போது ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிா், இளநீா், பன்னீா், பஞ்சாமிா்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT