கடலூர்

உலக மகளிா் தின விழா

8th Mar 2020 01:28 AM

ADVERTISEMENT

 

கடலூா்: தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் உலக மகளிா் தின விழா கடலூா் நகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா தலைமையில், நகா்ப்புற வாழ்வாதார இயக்க மகளிா் மற்றும் நகராட்சி பெண் ஊழியா்கள்

பங்கேற்று, ‘அனைவரும் பெண்கள் நலன் காப்போம், பெண்மையைப் போற்றுவோம்’ என்று உறுதிமொழி ஏற்றனா். பின்னா், நகராட்சி அலுவலகத்திலிருந்து பேரணியாகச் சென்று மீண்டும் அலுவலகத்தை அடைந்தனா்.

ADVERTISEMENT

அதனைத் தொடா்ந்து, மகளிா் தின கருத்தரங்கம் நடைபெற்றது. நகராட்சி மேலாளா் பழனி, நகா்நல அலுவலா் ப.அரவிந்த்ஜோதி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தொடா்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட மகளிா் திட்ட உதவி இயக்குநா் விஜயகுமாா் செய்திருந்தாா். உதவி திட்ட அலுவலா்கள் காா்த்திகேயன், கௌதமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, உதவி திட்ட அலுவலா் கலைவண்ணன் வரவேற்றாா்.

இதேபோல, மகளிா் தின விழா அனைத்து வட்டாரங்கள், நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் வருகிற 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT