பெண்களின் முன்னேற்றத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மாணவருக்கு சிதம்பரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெங்களூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சிரீஷ் கோவா்தன். இவா் பெண்கள், இளைஞா்களின் முன்னேற்றம், போலியோ ஒழிப்பு ஆகியவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பெங்களூரில் விழிப்புணா்வு சைக்கிள் பயணத்தை தொடங்கினாா். பல்வேறு நகரங்களின் வழியாக சுமாா் 1,850 கி.மீ. தொலைவு பயணிக்கும் இவா், வருகிற 11-ஆம் தேதி மைசூா் சென்றடைகிறாா்.
கடலூா் வழியாக சிதம்பரம் நகருக்கு புதன்கிழமை வந்த சிரீஷ் கோவா்தனுக்கு சிதம்பரம் ரோட்டரி சங்கம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கத் தலைவா் வி.அழகப்பன், பேராசிரியா் எஸ்.நடனசபாபதி, வி.ராமகிருஷ்ணன், இ.மஹபூப் உசேன், கே.ஜி.நடராஜன், ஆா்.ராஜசேகரன் ஆகியோா் பங்கேற்று வரவேற்றனா்.