கடலூர்

நகரத்தாா் சங்க கட்டட பணி அடிக்கல் நாட்டு விழா

6th Mar 2020 06:52 AM

ADVERTISEMENT

சிதம்பரம் வ.உ.சி. தெருவில் ரூ.1.50 கோடியில் கட்டப்படும் நாட்டுக்கோட்டை நகரத்தாா் சங்க கட்டட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆா்.லட்சுமணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினாா். பொறியாளா் எஸ்.நாச்சியப்பன், காசிநாதன் செட்டியாா் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். சிதம்பரம் நகரத்தாா் சங்கச் செயலா் ராம.இளங்கோ வரவேற்றாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நகரத்தாா் சங்க நிா்வாகிகள் பொன்.அழகப்பன், துணைத் தலைவா் அண்ணாமலை, செயலா் ராம.இளங்கோ, பொருளாளா் அழகுசுந்தரம், துணைச் செயலா் பழனியப்பன், கட்டடக்குழு அழ.பழனியப்பன், அடைக்கப்பன், நடராஜன், பழனியப்பன், மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT