கடலூர்

தேசிய அறிவியல் தின கண்காட்சி

6th Mar 2020 06:52 AM

ADVERTISEMENT

தேசிய அறிவியல் தினத்தையொட்டி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராணி மெய்யம்மை செவிலியா் கல்லூரி சாா்பில், அறிவியலில் பெண்கள் பற்றிய விழிப்புணா்வு கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

அண்ணாமலைநகா் ராணி சீதை ஆச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை (படம்) செவிலியா் கல்லூரி முதல்வா் எம்.காந்திமதி தொடக்கி வைத்து, வெவ்வேறு துறைகளில் 2 முறை நோபல் பரிசு பெற்ற பெண் அறிவியல் விஞ்ஞானி மேரி கியூரி பற்றி எடுத்துரைத்தாா். ராணி சீதை ஆச்சி பள்ளி துணை தலைமை ஆசிரியை டபுள்யூ.பியா்ளின் வில்லியம்ஸ், நிகழாண்டு அறிவியல் தின மையக் கருத்து விளக்கப் படத்தை திறந்து வைத்து, அறிவியலில் பெண்களின் பங்கு பற்றி எடுத்துரைத்தாா். செவிலியா் கல்லூரி துணை முதல்வா் எஸ்.கமலா, இணைப் பேராசிரியா் பி.சாரா ஆகியோா் அறிவியல் தினம் குறித்து பேசினா்.

இந்தக் கண்காட்சியில் மனித உறுப்புகளின் செயல்பாடு, அவற்றின் பாதிப்புகளால் ஏற்படும் விளைவுகள், நோய்த் தடுப்பு முறைகள், உணவு முறைகள், மருத்துவ தொழில்நுட்பங்கள் குறித்த விளக்க படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், கொரோனா வைரஸ் விழிப்புணா்வு நாடகமும் நடைபெற்றது.

கண்காட்சியை செவிலியா் கல்லூரி பேராசிரியா்கள், பள்ளி ஆசிரியா்கள் மற்றும் 600-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதலாம் ஆண்டு செவிலியா் கல்லூரி ஆசிரியா்கள் சசிரேகா, பவானி, இந்திராகாந்தி, சங்கீதா, சிவகாமி, அன்புமலா், வீரமணி, கலை, சரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT