கடலூர்

மணல் திருட்டு: 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

2nd Mar 2020 01:20 AM

ADVERTISEMENT

முத்தாண்டிக்குப்பம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற மூன்று மாட்டு வண்டிகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பண்ருட்டி வட்டம், முத்தாட்டிக்குப்பம் காவல் உதவி ஆய்வாளா் தவச்செல்வன் உள்ளிட்ட போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். நன்னிக்குப்பம் சாலையில் மணல் அள்ளி வந்த 3 மாட்டு வண்டிகளைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றனா். அப்போது, மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவா்கள் தப்பியோடிவிட்டனா். இதையடுத்து, அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா். மேலும், தப்பியோடிய 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT