கடலூர்

டிராக்டா் மோதியதில் இளைஞா் பலி

2nd Mar 2020 01:20 AM

ADVERTISEMENT

விருத்தாசலம் அருகே டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் திருகளப்பூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் முரளி (39). இவருக்கு திருமணம் முடிந்து 3 மாதங்கள் அகிறது.

இந்த நிலையில், அவருக்கு ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாள் என்பதால், கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள திருகொளஞ்சியப்பா் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மோட்டாா் சைக்கிளில் தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

ராஜேந்திரபட்டினம் அருகே சென்ற போது, முன்னாள் சென்ற டிப்பா் பொருத்தப்பட்ட டிராக்டரை முந்திச் செல்ல முயன்றாா். அப்போது, டிராக்டரின் டயா் மோதி கீழே விழுந்த அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT