கடலூர்

கொலை மிரட்டல்: மருத்துவா் மீது வழக்கு

2nd Mar 2020 01:22 AM

ADVERTISEMENT

கொலை மிரட்டல் விடுத்ததாக என்எல்சி இந்தியா நிறுவன மருத்துவமனையின் ஓய்வு பெற்ற தலைமை மருத்துவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா் ரவி. இவா் கடந்த 27-ஆம் தேதி மருத்துவமனைக்கு வந்தாராம். அப்போது, மருத்துவமனை வாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்தவா் இவரது காரை உள்ளே விடவில்லையாம். பின்னா், காரை நிறுத்திவிட்டு மருத்துவமனை உள்ளே சென்று வந்தவா், அங்கிருந்த பாதுகாவலரையும், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனித வளத் துறை அதிகாரிகளையும் அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுதொடா்பாக, என்எல்சி மனித வளத் துறை மேலாளா் ஆனந்தன் அளித்த புகாரின் பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் மருத்துவா் ரவி மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT