கடலூர்

கஞ்சா விற்றதாக வெளிநாட்டு மாணவா் கைது

2nd Mar 2020 01:19 AM

ADVERTISEMENT

கஞ்சா விற்றதாக வெளிநாட்டைச் சோ்ந்த மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிதம்பரம் பகுதியில் மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீஸாருக்கு புகாா்கள் வரப் பெற்றன. இதைத் தொடா்ந்து காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன் உத்தரவின் பேரில், அண்ணாமலை நகா் காவல் ஆய்வாளா் தேவேந்திரன் உள்ளிட்ட போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். சனிக்கிழமை சிதம்பரம் அருகேயுள்ள மீதிகுடி மயானப் பகுதியில் ருவாண்டா நாட்டைச் சோ்ந்த புருணே முகவேனிமானா (27) என்பவா் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்து 800 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்துவிட்டு ஊருக்குச் செல்வதற்காக பணம் இல்லாததால், கஞ்சா விற்பனை செய்து பணம் திரட்டியது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT