கடலூர்

கடலூரில் கரோனாவுக்கு 67 வயது முதியவர் சாவு

21st Jun 2020 04:18 PM

ADVERTISEMENT

கடலூரில் கரோனாவுக்கு 67 வயது முதியவர் ஒருவர் மரணமடைந்தார். 

கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 745 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 263 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த கடலூர் கோண்டூரைச் சேர்ந்த 67 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தார். 

இதனால் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் 1,209 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT