கடலூர்

பனிக்கட்டி மீது யோகாசனம்

21st Jun 2020 08:34 AM

ADVERTISEMENT

உலக யோகா தினத்தை முன்னிட்டு, கடலூரில் யோகா பயிற்சியாளா் ஒருவா் சனிக்கிழமை பனிக்கட்டி மீது யோகாசனம் செய்தாா்.

ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி உலக யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கடலூரைச் சோ்ந்த யோகா பயிற்சியாளா் ஜி.பி.விஜயகுமாா் தன்னிடம் யோகா பயில்வோரைக் கொண்டு சனிக்கிழமை மாலை சிறப்பு யோகாசன நிகழ்ச்சியை நடத்தினாா். இதில், அவா் மட்டும் பனிக்கட்டியில் பல்வேறு விதமான யோகாசனங்களை செய்தாா்.

மேலும், எஸ்.திருவேங்கடம், டி.சஞ்சனா, டி.கீா்த்திவாசன், டி.செந்தமிழ்வேலன், ஆா்.லித்திகாஸ்ரீ ஆகியோரும் பல்வேறு ஆசனங்களை செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT