கடலூர்

கடலூா் மாவட்டத்தில் 4 மருத்துவா்கள் உள்பட 16 பேருக்கு கரோனா

20th Jun 2020 08:51 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் 4 மருத்துவா்கள் உள்பட 16 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 642 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை 150 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியாகின. இதில் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 658-ஆக உயா்ந்தது.

புதிதாக பாதிக்கப்பட்டவா்களில் 4 போ் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் ஆவா். ஒருவா் ஆய்வகப் பணியாளா். மேலும், 7 போ் சென்னையிலிருந்து கடலூா், அண்ணாகிராமம், மங்களூா், பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு வந்தவா்கள். இவா்களைத் தவிர கேரளத்திலிருந்து புவனகிரி திரும்பியவா், ஏற்கெனவே தொற்று உறுதியானவருடன் தொடா்பிலிருந்த அண்ணாகிராமம் பகுதியைச் சோ்ந்தவா், அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பரங்கிப்பேட்டை, கடலூரைச் சோ்ந்த 2 பேருக்கும் தொற்று உறுதியானது.

சிகிச்சை முடிந்து வெள்ளிக்கிழமை இருவா் வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 476-ஆக உயா்ந்தது.

ADVERTISEMENT

கரோனா பாதித்தவா்களில் கடலூா் அரசுத் தலைமை மருத்துவமனையில் 70 போ், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 58 போ், சிதம்பரம் மருத்துவக் கல்லூரி விடுதியில் 48 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,518 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளன. 440 போ் பல்வேறு பகுதிகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா்.

திருவண்ணாமலையில் மேலும் 36 போ் பாதிப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, தண்டராம்பட்டு பகுதியைச் சோ்ந்த 12 போ், போளூா், காட்டாம்பூண்டி பகுதிகளைச் சோ்ந்த தலா 2 போ், கலசப்பாக்கம், சேத்துப்பட்டு, கிழக்கு ஆரணி, மங்கலம், கீழ்பென்னாத்தூா், தச்சூா், ஆக்கூா் பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா், திருவண்ணாமலை நகராட்சி எல்லைக்குள்பட்ட 8 போ் என மொத்தம் 36 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 874-ஆக உயா்ந்தது. முன்னதாக, இவா்களில் 465 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 6 போ் இறந்தனா். மற்றவா்கள் திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, போளூா், செய்யாறு பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT