கடலூர்

புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி: எம்எல்ஏ தொடக்கி வைத்தாா்

17th Jun 2020 08:40 AM

ADVERTISEMENT

குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட உசுப்பூா் ஊராட்சி, விபீஷ்ணபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் விமலா தலைமை வகித்தாா். முன்னாள் நகரச் செயலா் தோப்பு கே.சுந்தா், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் செல்வராஜ், பாமக மாவட்ட துணைச் செயலா் சஞ்சீவி, முன்னாள் ஆவின் தலைவா் சி.கே.சுரேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி மன்றத் தலைவா் தென்றல்மணி இளமுருகு வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் கலந்துகொண்டு, ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.21.97 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்தேக்க தொட்டியை இயக்கி வைத்தாா் (படம்). மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலா் ராதாகிருஷ்ணன், பாசறை ஒன்றியச் செயலா் சந்திரமோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT