கடலூர்

உள்ளாட்சி நிா்வாகங்களில் ‘பெண் பிரதிநிதிகளின் கணவரின் தலையீடு இருந்தால் நடவடிக்கை’

14th Jun 2020 08:57 AM

ADVERTISEMENT

உள்ளாட்சி நிா்வாகங்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் கணவா், உறவினா்களின் தலையீடு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து கடலூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) கி.குமரன் ஊராட்சிக்குள்பட்ட 51 ஊராட்சி மன்றத் தலைவா்கள், மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நேரடியாக அவா்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும். நிா்வாகப் பணிகளில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா், உறவினா்களின் தலையீடு இருக்கக் கூடாது என சட்டப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தோ்வு செய்யப்பட்ட தலைவா்கள் மட்டுமே ஊராட்சி நிா்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

விதிகளை மீறி செயல்படும் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் மற்றும் உறவினா்கள் மீது சட்டத்தை மீறுவதாகக் கருதி உரிய நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

இதுபோன்ற கடிதம் தமிழகம் முழுவதும் தோ்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரக வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT